93 ஆயிரம் மெற்றிக் தொன் பசளை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பசளைகள் தொடர்பான செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக 62 ஆயிரம் மெற்றிக் தொன் பொட்டாசியம் குளோரைட், 31 ஆயிரம் மெற்றிக் தொன் தேயிலை பசளை, 752 மெற்றிக் தொன் காய்கறி மற்றும் மலர் பயிர் செய்கைகளுக்கு பயன்படுத்தப்படும் பசளை ஆகியவனவே இறக்குமதியாகி செய்யப்பட்டுள்ளது என்றும் பசளைகள் தொடர்பான செயலகத்தின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், 1500 மெற்றிக் தொன் யூரியா, 2 ஆயிரத்து மெற்றி தொன் நேரடியாகப் பயன்படுத்தப்படும் பசளை ரகங்கள்,
913 மெற்றிக் தொன் கலப்பு பசளை என்பவற்றை இறக்குமதி செய்யவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இரசாயன பசளைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட பின்னர், பொட்டாசியம் குளோரைட் உட்பட பசளைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
#SrilankaNews