இதுக்கு தான் படிக்கணும்! 400×4=800.. ஜோவிகாவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
பிக் பாஸ் வீட்டில் நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா போட்டியாளராக வந்திருக்கிறார். தனக்கு படிப்பு வரவில்லை என்பதால் 9ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டதாக அவர் ஷோவில் கூறி இருந்தார்.
குறைந்தபட்சம் 12ம் வகுப்பு வரையாவது படிக்க வேண்டும் என அட்வைஸ் சொன்ன விசித்ராவுடன் பெரிய சண்டை போட்டு அந்த பஞ்சாயத்தை கமல்ஹாசன் வரை கொண்டு சென்றார் ஜோவிகா.
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் grocery அளவு பார்க்கும் போது 400×4 எவ்ளோ என தெரியாமல் அவர் விழித்துக்கொண்டிருக்க, மற்றொரு போட்டியாளர் விஜய் வந்து 800 என கூறுகிறார். அது தவறு என கூட ஜோவிகா கண்டுபிடிக்கவில்லை.
‘இதுக்கு தான் படிக்கணும்’ என நெட்டிசன்கள் ஜோவிகாவை விமர்சித்து வருகின்றனர்.
மேலும் கால் கிலோ பாக்கெட் நான்கு சேர்த்தால் எவ்வளவு என ஜோவிகாவுக்கு தெரியவில்லை என நெட்டிசன்கள் இன்னொரு வீடியோவை வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர்.