1940690 droneattack3008 scaled
உலகம்ஏனையவைசெய்திகள்

ரஷியா மண்ணில் 18 மாதங்களில் மிகப்பெரிய தாக்குதல்: 6

Share

ரஷியா மண்ணில் 18 மாதங்களில் மிகப்பெரிய தாக்குதல்: 6

உக்ரைன் மீது ரஷியா கடந்த 18 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் அடி வாங்கிக் கொண்டிருந்த உக்ரைன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவால் தற்போது பதிலடி கொடுத்து வருகிறது.

குறிப்பாக டிரோன் மூலம் முக்கியமான இடத்தை டார்கெட் செய்து வருகிறது.
இதனால் ரஷியாவில் உயிர்ச்சேதம் இல்லை என்றாலும், கட்டிடங்கள் போன்றவை கட்டமைப்புகள் சேதம் அடைந்து வருகின்றன.

இன்று அதிகாலை ஆறு பிராந்தியங்களை இலக்காக வைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 18 மாதங்களில் ரஷியா மீதான மிகப்பெரிய தாக்குதல் இது எனக் கூறப்படுகிறது.

ரஷியாவின் மேற்கு பிராந்தியமான பிஸ்கோவில் உள்ள விமான நிலையம் டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால் அப்பகுதி தீப்பிடித்து எரிந்ததாக உள்ளூர் கவர்னர் மற்றும் மீடியாக்கள் தெரிவித்தன.

இதற்கிடையே ஓர்யோல், பிரயான்ஸ்க், ரியாஜான், கலுகா மற்றும் மாஸ்கோ பிராந்தியத்தில் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிஸ்கோ பிராந்தியம் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில், நான்கு Il-78 போக்குவரத்து விமானங்கள் சேதமடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து பிஸ்கோவ் கவர்னர் மிஹைல் விடேர்னிகோவ், இந்த விமான நிலையத்தில் வரும், செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...