ஏனையவை
வெளிநாட்டவர்களை வெளியேற்றவேண்டும்: ஜேர்மனியில் வளர்ந்துவரும் சர்ச்சைக்குரிய கட்சி


வெளிநாட்டவர்களை வெளியேற்றவேண்டும்: ஜேர்மனியில் வளர்ந்துவரும் சர்ச்சைக்குரிய கட்சி
ஜேர்மனியிலிருந்து வெளிநாட்டவர்களை வெளியேற்றவேண்டும் என ஜேர்மனியில் வளர்ந்துவரும் சர்ச்சைக்குரிய கட்சி ஒன்று தெரிவித்துள்ளது.
ஜேர்மனியின் சில பகுதிகளில், குறிப்பாக பவேரியா மாகாணத்தில், Alternative for Germany (AfD) என்னும் வலதுசாரிக் கட்சிக்கு வரலாறு காணாத அளவில் ஆதரவு அதிகரித்துவருவதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த AfD கட்சியினர் இனவெறுப்பாளர்கள் என பெயரெடுத்தவர்கள். ஜேர்மானியரல்லாத வெளிநாட்டினர் என்று தெரிந்தாலே அவர்கள் மீது வெறுப்பு காட்டுபவர்கள் இந்த கட்சியினர். புலம்பெயர்ந்தோரையும் சிறுபான்மையினரையும் அவர்கள் எதிர்க்கிறார்கள்.
இந்நிலையில், பவேரியாவில் உள்ளூர் தேர்தல்கள் நடைபெற உள்ளன. பவேரியாவில் AfD கட்சிக்கு ஆதரவு அதிகரித்துவரும் நிலையில், அக்கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வெளிப்படையாகவே வெளிநாட்டவர்களை விமர்சிக்கிறார்.
மருத்துவமனைகள், பள்ளிகள் என எங்கு பார்த்தாலும் வெளிநாட்டவர்களாக இருக்கிறார்கள் என்று கூறும் அவர், வெளிநாட்டவர்களை ஜேர்மனியிலிருந்து வெளியேற்றவேண்டும்.
ஜேர்மனியை வெளிநாட்டவர்களிடமிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளிகள் முழுவதும் ஜேர்மன் மொழி பேசாத வெளிநாட்டவர்களாக இருக்கிறார்கள். இப்படி இருந்தால் நம் பிள்ளைகளுக்கு எப்படி நல்ல கல்வி கிடைக்கும் என்கிறார் அவர்.
ஆனாலும், இப்படி புலம்பெயர்தலை, வெளிநாட்டவர்களை எதிர்க்கும் AfD கட்சிக்கு எல்லோரும் ஆதரவு தரவில்லை. அதை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். என்றாலும், அக்கட்சிக்கு ஆதரவு பெருகிவருவதால் எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என புலம்பெயர்ந்தோர் அச்சமடைந்துள்ளதை மறுப்பதற்கில்லை.
You must be logged in to post a comment Login