இலங்கை
தொழிற் சந்தையானது ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் : யாழ். அரசாங்க அதிபர்
தொழிற் சந்தையானது ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் : யாழ். அரசாங்க அதிபர்
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பாக எமது மக்களுக்கு போதிய விளக்கமில்லாத நிலையுள்ளது, அவற்றிற்கு ஆலோசனை வழங்கும் தொழிற் சந்தையாக இது அமையும் என யாழ். மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு , விளையாட்டுத்துறை அமைச்சர் மனுஷ நாணயக்காராவின் ஏற்பாட்டில் “வடக்கின் ஒளிமயம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் “Global fair 2023” நிகழ்வானது இன்று (15.07.2023) காலை 9.00 மணியளவில் யாழ். முற்றவெளி மைதானத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் பங்கேற்புடன் ஆரம்பமானது.
இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையிலுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணக்கூடிய சந்தர்ப்பமாக மனித வளத்தை உலகிற்கு இட்டுச் செல்வதற்கான வாய்ப்பாக இத் தொழிற்சந்தை அமையவுள்ளதாக நேற்றைய கூட்டத்தில் வெளிநாட்டு தொழிற்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இங்குள்ள இளைஞர்கள் தொழில்வாய்ப்புக்களைத் தேடி வெளிநாடுகளுக்கு சென்றாலும் போதிய தொழிற்பயிற்சி, மொழிப்பயிற்சி, சட்ட ஆலோசனைகள் நிலை இல்லாத நிலையுள்ளது.
இவ்வாறானவற்றிற்கு இத் தொழிற்சந்தை மூலம் தீர்வு காண முடியும்.
அதேபோல் 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஓய்வு பெற்றவர்கள் இன்றுவரை ஊழியர் சேமலாப நிதியைப் பெறாமலும், 1990ம் ஆண்டு காலப்பகுதியில் வேலையை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஊழியர் சேமலாப நிதி வழங்கப்படும் என்ற வாய்ப்பை பலர் அறியாமலுள்ளனர்.
இவ்வாறு ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பாக எமது மக்களுக்கு போதிய விளக்கமில்லாத நிலையுள்ளது அவற்றிற்கு ஆலோசனை வழங்கும் தொழிற் சந்தையாக இது அமையும்.
ஏனைய நான்கு மாவட்டங்களில் இத் தொழிற்சந்தை ஆரம்பிக்கப்பட்டாலும் யாழ்ப்பாணத்திலே இத் திட்டம் வெற்றியளித்துள்ளது.
எனவே வட பிராந்தியத்தில் தொழிற் பயிற்சி நிலையத்தை ஆரம்பிப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கூறியிருந்தார். அவருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பாக அறிவிப்பு - tamilnaadi.com