இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் 200 பில்லியன் ரூபாய் (20,000 கோடி) பெறுமதியான தங்கம் அடகு வைக்கப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவர கற்கைகள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
2022ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 193 பில்லியன் ரூபாய் (19,300 கோடி) பெறுமதியான தங்கம் அடகு வைக்கப்பட்டுள்ளது.
அரச அங்கிகாரம் பெற்ற 13 வர்த்தக வங்கிகள் மற்றும் 10 அடகு அல்லது நிதி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே குறித்த விடயம் தெரியவந்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தங்கத்தை அடகு வைத்தவர்களில் பெரும்பாலோர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல சுட்டிக்காட்டியுள்ளார்.
தனியார் அடகு மையங்கள் தங்கத்தின் பெறுமதிக்கு அதிக பணத்தை வழங்குவதன் காரணமாக அவற்றை அதிகளவான நுகர்வோர் நாடுவதாகவும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment