R
இலங்கைஏனையவை

ரணிலின் பயணங்களால் நாட்டுக்கு நன்மை இல்லை: திஸ்ஸ அத்தநாயக்க

Share

ரணிலின் பயணங்களால் நாட்டுக்கு நன்மை இல்லை: திஸ்ஸ அத்தநாயக்க

ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு பயணங்கள் மூலம் நாட்டுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் ​போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க பல தடவைகள் வௌிநாடுகளுக்கான விஜயங்களை மேற்கொண்டுள்ளார். எனினும் அதன் மூலம் நாட்டின் கடன் நிலுவைத் தொகைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கோ, பொருளாதார வளர்ச்சிக்கோ எதுவித நன்மையும் கிட்டவில்லை.

நிலையான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்குப் பதில் தற்காலிக ஒட்டு போடப்பட்ட அரசாங்கமொன்று அதிகாரத்தில் இருப்பதன் காரணமாக சர்வதேச மட்டத்தில் நாட்டின் மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே சர்வதேச நாடுகள் இலங்கைக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்குத் தயக்கம் காட்டுகின்றன என்றும் திஸ்ஸ அத்தநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.R

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image acfd8193e8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிரகரி வாவியில் விழுந்த நீர் விமானம் மீட்பு: கடும் சேதங்களுக்கு மத்தியில் கரைக்கு கொண்டு வரப்பட்டது!

நுவரெலியா கிரகரி வாவியில் (Gregory Lake) கடந்த வியாழக்கிழமை விபத்துக்குள்ளான நீர் விமானம் (Sea Plane),...

26 6961d3a5f270c
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 2,500 மருந்தகங்கள் மூடப்படும் அபாயம்: மருந்தாளர் தட்டுப்பாட்டால் உரிமம் ரத்தாகும் எச்சரிக்கை!

இலங்கையில் தகுதிவாய்ந்த மருந்தாளர்களை (Qualified Pharmacists) முழுநேரமாகப் பணியமர்த்த முடியாத காரணத்தினால், சுமார் 2,500-க்கும் மேற்பட்ட...

gagenthirakumar
செய்திகள்அரசியல்இலங்கை

அவதூறு பிரசாரத்தை ஏற்க முடியாது: கொள்கை வேறுபாடு இருந்தாலும் பிரதமருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த கஜேந்திரகுமார்!

பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியாவுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் அவதூறு பிரசாரங்களை,...

26 696156064e04d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவு கரையை நோக்கி நகரும் தாழமுக்கம்: வடக்கு மற்றும் கிழக்கில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் இன்று முல்லைத்தீவு கரையைத் தாண்டும் என வளிமண்டலவியல்...