90907929
மருத்துவம்

தலைவலிக்கு உடனடி தீர்வு வேண்டுமா? இதோ சில 6 அற்புதமான டிப்ஸ்

Share

நாம் அடிக்கடி சந்திக்கும் ஒரு பிரச்சினை தான் தலைவலி. தொடர்ந்து தொலைகாட்சி, அலைபேசி மற்றும் கணினியை அதிகமாக பார்த்துக் கொண்டே இருப்பதால் கூட தலைவலி ஏற்பட முக்கிய காரணமாக இருக்கலாம்.

இதனை மருந்துகள் இன்றி கூட எளியமுறையில் சரி செய்ய முடியும். தற்போது தலைவலிக்கு உடனடி தீர்வு தரக்கூடிய சில எளியவழிமுறைகளை இங்கே பார்ப்போம்.

  • உருளைக் கிழங்கை துண்டாக்கி, நெற்றியில் தேய்க்கவும் அல்லது அதனை அரைத்து தலையில் பற்று போல் இடுங்கள். சில நிமிடங்களில் தலை வலி மறைந்து போகும்.
  • ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து இஞ்சியை நசுக்கி அதில் போடுங்கள். 10 நிமிடம் நன்றாக கொதிக்க வையுங்கள். பின்னர் அதனை இறக்கி எலுமிச்சை சாறு சில துளிகள் பிழிந்து, அதனை வெதுவெதுப்பாக பருகவும். வலி சட்டென விட்டுவிடும்.
  • சுக்கு ஒரு துண்டு எடுத்து நீர் விட்டு அரைத்து தலையில் பற்று இடுங்கள். தலைவலி குணமாகிவிடும்
  • உங்கள் உடலில் தேவையான அளவு நீரில்லாதபோது சூடேறி தலைவலி உண்டாகும். உடனே சில டம்ளர் நீர் குடித்து பாருங்கள்.
  • முட்டைக் கோஸ் இலையை நீர் விடாமல் அரைத்து அதனை தலையில் பற்று இடவும். அதன் சற்றினை நெற்றியில் தடவவும்.
  • பால் கலக்காத வரகாபியில் சில துளி எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.

#LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35 1
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்குமருத்துவம்

துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா?

துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா? மூலிகையின் அரசி என்று அறியப்படும் துளசி செடியில் பல்வேறு...

tamilni 261 scaled
மருத்துவம்

உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு பயனா?

உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு பயனா? நாம் உணவு சமைக்கும் போது பலசுவைக்காக உணவுப் பொருட்களை...

tamilni 613 scaled
பொழுதுபோக்குமருத்துவம்

பனங்கிழங்கால் இத்தனை நன்மைகளா..!

பனங்கிழங்கால் இத்தனை நன்மைகளா..! நமது தாயகப் பிரதேசத்தில் தற்போது பனங்கிழங்கு சீசன் ஆரம்பமாகி மும்முமாக விற்பனை...

download 3 1 14
மருத்துவம்

நீரிழிவு நோயாளிகள் கால் வீக்கத்தை தவிர்க்க பின்பற்றவேண்டியவை!

உடலுக்கு தேவையான இன்சுலின் சுரக்காமல் இருப்பதும், சுரக்கும் இன்சுலினை உபயோகிக்காமல் இருப்பதும் தான் என்பது நீரிழிவு...