பொதுவாக கற்றாழை மருந்துப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது.
இதில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
அது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. குறிப்பாக உடல் எடையினை குறைக்க பெரிதும் உதவுகின்றது.
அந்தவகையில் கற்றாழை எப்படி உடல் எடையை குறைக்க உதவுகின்றது என்பதை பார்ப்போம்.
- கற்றாழை ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது மற்றும் இது உடலை தூய்மைப்படுத்துகிறது. நம் உடல் சுத்தமாக இருக்கும்போது, உடல் எடை விரைவில் குறையும்.
- கற்றாழை நம் உண்ணும் உணவை சரியாக ஜீரணிக்க உதவுகிறது. இது உடலில் இருக்கும் கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றுகிறது . இதனால் எடை குறைகிறது.
- கற்றாழை பல ஊட்டச்சத்துக்களை உடலுக்கு வழங்குகிறது. அதனால் பசைத்தன்மை குறைகிறது . குறைவாக சாப்பிடுவதால் எடையும் குறைகிறது. கற்றாழையை சரியான அளவில் தொடர்ந்து உணவில் சேர்த்தால், உடல் எடையை குறைக்க முடியும்.
- கற்றாழை உடலில் உள்ள சக்கரையின் அளவை குறைக்கும். அதுவும் உடல் எடை குறைய ஒரு காரணமாய் விளங்குகிறது.
Leave a comment