1 1646392097 1
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டுமா? இதோ சில எளிய அழகு குறிப்புகள் !!

Share

பொதுவாகவே சருமத்தில் இறந்த செல்கள் அப்படியே தங்கி விடுவதால் நமது சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

சருமத்தில் இறந்த செல்கள் தங்குவதால் அவை சருமத்தில் தொற்றை ஏற்படுத்துகின்றன.

இதனால் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகள் சருமத்தில் ஏற்படுகின்றன.  இதில் இருந்து விடுபட சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.

  • கடலை மாவில் தயிர் சேர்த்து பிசைந்து பேஸ்ட் செய்து தேய்த்தால் பருக்கள் காணாமல் போய்விடும். பயித்தம் பயிறு மாவில் தண்ணீர் ஊற்றி குழைத்து தேய்த்து வந்தால் முகத்தில் நிறம் கூடும்.
  • தேனில் பால், தயிர், அரைத்த எள்ளு எல்லாம் சரிசமமாக கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் ஆகும். அல்லது, 1 தேக்கரண்டி கடலை எண்ணெய்யில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வந்தால் முகப்பரு, கரும்புள்ளிகள் வரவே வராது.
  • சிறிது சுத்தமான தேனை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடம் அப்படியே விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளவும். இதைப் பயன்படுத்திய பிறகு சருமம் நிறமாகவும் மென்மையாகவும் இருப்பதை உங்களால் உணர முடியும்.
  • ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை ஃபேஸ் பேக் மாதிரி முகத்தில் பயன்படுத்தலாம்.
  • முகம் மற்றும் கழுத்து பகுதியில் இந்த கலவையை பூசி சுமார் 20 நிமிடம் அப்படியே விடவும். பின்னர் மிதமான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளவும். இது முக ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க உதவுகிறது.
  • எலுமிச்சை மற்றும் சர்க்கரை நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

 #LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...