மேலும் 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய சரக்குக் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார். நேற்று மாலை 7.00 மணியளவில் எரிவாயுவை...
கடந்த இரண்டு மாதங்களில் உள்ளூர் மற்றும் இறக்குமதி மூலப்பொருட்களின் பற்றாக்குறை காரணமாக, பண்டிகைக் காலத்தில் பட்டாசு பொருட்களின் விலைகள் 60% அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பட்டாசு சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த...
பிரதான நீர்த்தேக்கப் பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்ததன் காரணமாக பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 67 வீதத்தால் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கே.டி.என். சிறிவர்தன தெரிவித்துள்ளார். அதிக மழையுடன், நீர்மட்டம் நேற்றைய...
20 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான தனிநபர் சட்டமூலத்தை முன்வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஜக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒன்று...
நாட்டில் சுகாதார துறையை சிறப்பாக பேணுவதற்கும் தடையற்ற சேவையை வழங்குவதற்கும் என புதிய ஒருங்கிணைப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி, சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைக்கவும்,...
SriLankaNews யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் வீடொன்றில் காணப்பட்ட முச்சக்கரவண்டியொன்று மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத மர்ம நபர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்திற்கு முன்னால் உள்ள வீட்டில் சமையல்...
மன்னாரில் இருந்து மேலும் 10 பேர் அகதிகளாக இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. #SrilankaNEws
ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழர் தாயகத்தில் கட்டமைக்கப்பட்ட...
ரஷ்யாவின் எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்புக்காக 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான தனது அறக்கட்டளை மூலமாக பணத்தை முறைகேடாகக் கையாடல்...
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில் சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்துச் செல்லலாம்...
தமிழகத்தில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகளை நடத்தலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பொதுத்தேர்வை எழுதவுள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை...
வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் பாதுகாப்பு வாகனப் பிரிவு சாரதியொருவர் இன்று மாலை கொலை செய்யப்பட்டுள்ளார். கெஸ்பேவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்....
SriLankaNews சர்வகட்சி மாநாடு! – பங்கேற்கமாட்டோம் என்கிறார் அநுரகுமார யாழ். விசேட பொருளாதார மத்திய நிலையம் மஹிந்தவால் திறப்பு இந்த ஆட்சியாளர்களால் மக்களுக்கு முகம் கொடுக்க முடியாது! – சந்திரசேகரன் முகக்கவசங்களின் விலையும் அதிகரிப்பு!
எரிபொருள் வரிசை மரணத்தின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. குறித்த சம்பவம் நிட்டம்புவ, ஹொரகொல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கும் முச்சக்கர வண்டி சாரதிக்கும் ஏற்பட்ட...
கடவத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். பெற்ரோலை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்ற ஒருவரே இவ்வாறு மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ராகம வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக...
யாழ்ப்பாணம், மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறவும், நுகர்வோருக்கு மலிவு விலையில் காய்கறிகள் மற்றும் பழங்களை...
கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென்கொரியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சமாக இருந்து வருகிறது. ஆசியா கண்டத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 7...
வங்கக்கடலில் தென்கிழக்கு பிரதேசத்தில் உருவான குறைந்த காற்றழுத்தம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறியுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து இன்று காலை...
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் நல்லூர் விஜயம் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமரின் நல்லூர் வருகையை எதிர்த்து ஆர்பாட்டங்கள் ஏற்பாடாகியுள்ள நிலையில் விஜயம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. #SrilankaNews
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் நல்லூர் ஆலய வருகைக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அதிகளவான பொலிசாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதுடன் வீதி வழிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். #SrilankaNews