சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின், பரிசோதனை அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது. நாட்டில் பல பகுதிகளிலும் இடம்பெற்ற எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக...
நாட்டில் ஏற்படும் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் 8 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வெடிப்பு சம்பவம் தொடர்பில்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை மறுதினம் விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. டொலர் பிரச்சினை, யுகதனவி உடன்படிக்கை உட்பட முக்கியத்துவமிக்க விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டு தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில்...
5ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்குமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மாநாடு , எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதிவரை...
இந்து சமுத்திர மாநாட்டில் தலைமை உரையாற்றுவதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக தேரர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நாரஹேன்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார் எனத்...
நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து, அஞ்சல் மற்றும் வங்கி முதலான 12 முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவால் நேற்றைய தினம் இந்த வர்த்தமானி...
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச, ஸ்கொட்லாந்தின் க்லாஸ்கோ நகரைச் சென்றடைந்தள்ளார். ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று கிலாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை அடைந்த நிலையில் பிரித்தானியாவுக்கான...
” பன்டோரா ஆவணம் தொடர்பில் மட்டுமல்லாமல் 2016 இல் அம்பலப்படுத்தப்பட்ட பனாமா ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்துவதற்கு உடன் ஆணையிடுங்கள்.” இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் அபயராம விகாரையின் விகாராதிபதி...
எரிபொருள் விலையை தற்போதைய சூழ்நிலையில் அதிகரிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். மொட்டு கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இதன்போது உலக...
புதிய அரசமைப்புக்கான ஆரம்பக்கட்ட வரைவு நகல் இவ்வருடத்துக்குள் வெளியிடப்படும் – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ புதிய அரசமைப்புக்கான வரைவு நகலை தயாரிப்பதற்காக...
நாட்டின் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச மொழிக் கொள்கையை சமமாக பின்பற்ற வேண்டும். இதன் மூலமே நாட்டில் சமத்துவத்தைப் பேண முடியும். வெறும் வாய்வார்த்தை மூலம் வாக்குறுதிகளை வழங்குவதில் எவ்வித பயனும் இல்லை. இவ்வாறு தமிழ் முற்போக்குக்...
இந்திய இராணுவ பிரதான ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே நாளை செவ்வாய்க்கிழமைக்கு இலங்கைக்கு 5 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் அழைப்புக்கு அமைய இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்தப்...
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜீவன் தியாகராஜா நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளார். இந்த நியமனக் கடிதத்தை இன்று கோத்தாபாய ராஜபக்சவிடமிருந்து பெற்றுக் கொண்டு்ள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி முன்னிலையில் தனது கடமைகளை...
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்டு வரும் ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தனது இராஜினாமாக் கடிதத்தினை கையளித்துள்ளார். இதனையடுத்து எதிர்வரும் வாரத்திற்குள் வடமாகாண ஆளுநராக கடமைகளை ஜீவன் தியாகராஜா பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது....
இலங்கை இராணுவத்தின் 72ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு இன்று அநுராதபுரம் சாலியபுர கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கலந்துகொண்டுள்ளார். அத்துடன் கிரிக்கெட் மைதானம் ஒன்றையும் திறந்து வைத்ததுடன் மைதானத்தில் கிரிக்கெட்...
சர்வாதிகாரம் அல்லது ஏகாதிபத்திய அரசு வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உருவாகாத பழைமை வாய்ந்த வலய நாடாகவும் ஜனநாயக நாடாகவும் இலங்கை விளங்கும். அத்துடன் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் உடன் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். மேலும் இலங்கைக்குள் ஜனநாயக...
அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பேரக் குழந்தையை முதன்முதலில் பார்வையிட்டு அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அண்மையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா...
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுகிறது. அதன்படி எதிர்வரும் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிமுதல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...
நாட்டை திறப்பதற்கு உரிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அனைத்து பிரிவுகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ள...