சட்டவிரோத முறையில் கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி கடலில் இறால் பிடியில் ஈடுபட்ட 6 மீனவர்களை கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் இன்று கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய வலைகளும் மீட்கப்பட்டுள்ளது. அனுமதிப்பத்திரம் இன்றிய...
மட்டக்களப்பு – கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இயந்திரக் கோளாறு காரணமாக கடலில் தத்தளித்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இலங்கை திரும்ப முடியாமல் அந்தமான் தீவுக் கூட்டங்களில் தத்தளிக்கின்றார்கள். அவர்களை மீட்டெடுக்குமாறு...
வடக்கு கடற்பகுதியை இந்திய மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும், இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையையும் கண்டித்து நேற்று (23) மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கடல் பகுதியில் வரி அறவீடு செய்து இந்திய...
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் ஏப்ரல் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது....
இலங்கை மீனவர்கள் அறுவர் படகு ஒன்றுடன் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இலங்கை எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் சென்றமையால் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் நேற்று...
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த 12 மீனவர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு கடந்த திங்கட்கிழமை பருத்தித்துறை நீதவான்...
இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்ட வட்டமாக தெரிவித்தார். வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்றொழிலாளர்களுடன் கடற்றொழில் அமைச்சர் நேற்று...
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களும் விரைவாக விடுவிக்கப்பட தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,...
யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 16 இந்திய கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் – புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த கடற்தொழிலார்கள் இரு படகுகளில் எல்லை தாண்டி, கடற்தொழிலில் ஈடுபட்டு இருந்த...
இலங்கை – இந்திய மீனவர்களிடையே நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இழுவை மடி படகுகளின் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை ஆனான் நேற்று மாலை மூன்று மணியளவில் கச்சைதீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. இதன் பொழுது...
யாழ். சுழிபுரம் மேற்கு சவுக்கடி கடற்பரப்பில் நேற்று இரவு கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்களின் வலைகள் நாசமாக்கப்பட்டுள்ளன. சுமார் 12 இலட்சம் பெறுமதியான வலைகள் இந்திய இழுவை படகுகளால் அறுத்து நாசம் செய்யப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ்...
தமிழக கடற்தொழிலாளர்களின் 8 படகுகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றினால் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கான உரிமை கோரும் வழக்கு நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் எடுத்துக்...
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஐந்து மீனவர்கள் தமிழகத்தின் பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி...
யாழ்ப்பாண கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறல் மீண்டும் அதிகரித்துள்ளதாக யாழ், மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சங்கத் தலைவர் ஸ்ரீகந்தவேள் பிரகாஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள சங்க அலுவலகத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது...
இலங்கை படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,...
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பதினொரு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (21) பகல் பருத்தித்துறை அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை...
இந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் நேற்று (06) இந்தியாவின் சென்னையை சென்றடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இவர்கள் கடல் எல்லை மீறல் காரணமாக கடந்த நவம்பர் மாதம்...
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சரோஜினி இளங்கோவன் இன்று (29) உத்தரவிட்டார்....
எல்லை தாண்டி மீன் பிடித்த 23 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று (28) கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஐந்து படகையும் அதிலிருந்த 23 இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி...
இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நேற்று (24) மாலை இலங்கை கடற்படையினரால் துரத்தப்பட்டனர். இவ்வாறு துரத்திய சமயம் கடற்படையினர் அவற்றை வீடியோ வடிவில் ஒளிப்பதிவு செய்ததோடு இந்திய படகுகளின்...