Anura Dissanayake in Parliament.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

யுகதனவி உடன்படிக்கை அமெரிக்காவுடன் கைசாத்திடப்படவில்லை – அனுரகுமார திஸாநாயக்க

Share

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சர்ச்சைக்குரிய கெரவலப்பிட்டி யுகதனவி உடன்படிக்கை அமெரிக்காவின் நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டார்.

இன்றைய தினம் பாராளுமன்ற விசேட உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,

கெரவலப்பிட்டி யுகதனவி உடன்படிக்கை இதுவரை காலமும் பாராளுமன்றத்திலோ அமைச்சரவையிலோ முன்வைக்கப்படவில்லை.

இது நாட்டின் எரிசக்தி துறையையும் கெரவலப்பிட்டி அனல்மின் நிலையத்தையும் அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்காக கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தமாகும்.

இவ் ஒப்பந்தம் நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் இவ் ஒப்பந்தம் NFC Sri Lanka Power Holdings  என்ற நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனால் தான் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக குறித்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...