யாழில் மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாபச் சாவு!

மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாபச் சாவு

யாழ்., கொழும்புத்துறையில் இன்று மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

சுதேஸ்வரன் சுதர்சன் என்ற 29 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தார்.

கொன்கிறீட் கல் அரியும் இயந்திரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அதில் ஏற்பட்ட மின் ஒழுக்கு இளைஞரைத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்தார்.

#SrilankaNews

Exit mobile version