தொலைபேசியில் தொல்லை கொடுத்த இளைஞரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்! – தம்பதி கைது

jail arrested arrest prison crime police lock up police station shut

தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி – தொல்லை கொடுத்த இளைஞரை, நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கிய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சியம்பலாண்டுவ பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இளைஞர் ஒருவர், பெண்ணொருவருக்கு தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி வந்துளார். இது பற்றி அப்பெண் கணவருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து இளைஞரை கண்டுபிடித்து, இருவரும் அவரை வீதியில் வைத்து நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர்.

இந்த குற்றத்துக்காக அவர்கள் சியம்பலான்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஆண் 27 ஆம் திகதிவரை மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version