thavamani ajmeer 1
செய்திகள்உலகம்

கணவனைக் கொன்ற இளம் பெண்-அதிர்ச்சி சம்பவம்!!

Share

கணவனைக் கொன்று விட்டு மாரடைப்பால் கணவன் உயிரிழந்து விட்டார் என நாடகமாடிய மனைவியையும், அவரது கள்ளக்காதலனையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தமிழ்நாடு புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் அரசூர் ராஜாபகுதியைச் சேர்ந்த அப்பள வியாபாரியான சந்திரசேகர் (வயது-43), தவமணி (வயது-35) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளனர்.

சமீப காலமாக கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 28 ஆம் திகதி அன்று நள்ளிரவு நீண்ட நேரம் குடும்பத் தகராறு நடந்ததை அடுத்து மனைவி கணவரை கழுத்தை நெரித்தும் தலையணையால் முகத்தை அமத்தியும் கொலைசெய்துள்ளார்.

காலையில் தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என அயலவர்களுக்கு தெரிவித்தார்.

தகவலறிந்த வில்லியனூர் பொலிஸார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தபோது, பிரேத பரிசோதனையில் கழுத்தை நெரித்து கொலைசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவர் கணவனைக் கொலை செய்தமை தெரியவந்துள்ளது.

அரசூரில் கறிக்கோழி கடைக்கு அடிக்கடி செல்லும்போது திண்டுக்கல்லை சேர்ந்த அஜ்மீர்கான் (வயது-25) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.

இது கள்ள உறவாக மாறியது. எங்கள் வீட்டில் மாடியிலேயே வாடகைக்கு குடியேறினார் அஜ்மீர். எங்கள் இருவருக்கும் இருக்கும் தொடர்பு தெரிந்துவிட்டதால் கணவர் கண்டித்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. கடந்த 28 ஆம் திகதி தகராறு அதிகமானது.

இதையடுத்து நானும் அவனும் சேர்ந்து சந்திரசேகரை கழுத்தை நெரித்தும் தலையணையால் அவரது முகத்தை அழுத்தியும் கொலை செய்துவிட்டு மாரடைப்பால் இறந்துவிட்டார் என எல்லோரிடமும் சொன்னோம் எனத் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...