Vijayakanth Viyaskanth SRH IPL 2024 1
செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடர்: இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைவு!

Share

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை தேசிய ஆடவர் அணியில், இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஒருநாள் தொடரின்போது தசைப்பிடிப்பினால் பாதிக்கப்பட்ட முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க இன்னும் முழுமையாகக் குணமடையாத நிலையில், அவருக்குப் பதிலாக வியாஸ்காந்த் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

தற்போது கட்டாரில் நடைபெற்று வரும் வளர்ந்துவரும் நட்சத்திரங்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை ‘ஏ’ அணிக்காக விளையாடி வரும் வியாஸ்காந்த், அங்கிருந்து நேரடியாகப் பாகிஸ்தானுக்குப் பயணிக்கவுள்ளார்.

இன்று (நவ 18) ஆரம்பமாகும் இந்த முத்தரப்புத் தொடரில், இலங்கை அணி தனது முதல் போட்டியில் நாளை மறுதினம் (நவ 20) ஸிம்பாப்வே அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

 

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...