சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர்! – நீதி வேண்டி யாழில் போராட்டம்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பு சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் மரணத்துக்கு நீதி வேண்டி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று (16) யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் அருகில் மயங்கி கிடந்த இளம் குடும்பஸ்தர் மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ம.ஜெனுசன் (வயது–24) எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்தநபர் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த நபரின் உறவினர்கள் இறுதிக் கிரியை ஒன்றில் அவர் கலந்துகொண்டார் எனவும், அங்கு அவருடன் சிலர் முரண்பட்டனர் எனவும், அவர்களே அவரை கொலை செய்தனர் எனவும் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தனர்.

எனவே குறித்த மரணம் கொலை எனவும், கொலை தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளை கைது செய்யக்கோரியும் இவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

21 61446348aa1e6

 

 

Exit mobile version