சர்வதேசமே எதிர்பார்த்த முக்கிய சந்திப்பு..! புடினை சந்திக்கப் போகும் ஜெலன்ஸ்கி

10 16

போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்தைகளை மேற்கொள்வதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சந்திக்க உள்ளார்.

குறித்த சந்திப்பு எதிர்வரும் வியாழக்கிழமை(15.11.2025) துருக்கியின் இஸ்தான்புல்லில் இடம்பெறவுள்ளது.

துருக்கியில் இரண்டு நாடுகளுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த புடின் முன்மொழிந்திருந்தார்.

குறித்த முன்மொழிவுக்கு உக்ரைன் உடன்பட வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் கோரிய சிறிது நேரத்திலேயே ஜெலன்ஸ்கி ‘X’ தளத்தில் பதிவொன்றை இட்டு அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மக்கள் கொல்லப்படுவது தொடர்வதில் எந்த ஒரு பலனும் இல்லை எனவும் வியாழக்கிழமை துருக்கியில் புடினுக்காக நான் காத்திருப்பேன் எனவும் ஜெலன்ஸ்கி குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்

மேலும், இந்த முறை ரஷ்யா, எந்தவொரு சாக்கையும் கூறாது போர் நிறுத்தத்திற்கு உடன்படும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version