ஐரோப்பாவை நோக்கி யாரும் படையெடுக்க மாட்டார்கள்! ஜெலென்ஸ்கி
ரஷ்ய போரில் தங்களது தாக்குதல் மூலம் ஐரோப்பாவிற்கு யாரும் படையெடுத்து வரமாட்டார்கள் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் தொடர்ந்து போராடி வருகிறது. லிதுவேனியாவில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கலந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து உக்ரைன் நேட்டோவில் இருக்குமா என்பது பற்றிய சந்தேகங்கள் அல்லது தெளிவின்மையை நாங்கள் நீக்கிவிட்டோம் என ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ‘இப்போது உக்ரைனில், எங்கள் நிலத்தில், நமது வானில், நமது பொதுவான பாதுகாப்பிற்கான அடிப்படை ரஷ்ய அச்சுறுத்தலின் சிக்கலை தீர்க்க முடியும்.
இந்தப் போரில் எங்களது தாக்குதலானது, ஐரோப்பாவிற்கு மேலும் படையெடுப்பாளர்கள் வரமாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. சுதந்திரம் நிச்சயமாக நிலைத்து நிற்கும், இதுவே நமது வீரர்கள் மற்றும் நமது வீரர்களுக்கு உதவும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து உறுதி செய்யும் முக்கிய விடயம்’ என தெரிவித்துள்ளார்.