மூன்றாவது முறையாகவும் சீனாவின் அதிபராக ஷி ஜின்பிங் பதவி வகிப்பார் என ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
சீனவின் அதிபா் ஷி ஜின்பிங் மீண்டும் மூன்றாவது முறையாக அதிபராக பதவியில் தொடர வழிசெய்யும் தீா்மானத்துக்கு சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு கடந்த வியாழக்கிழமை அனுமதி அளித்தது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆண்டுகால வரலாற்றில், கட்சியின் நிறுவனா் மாவோ சேதுங் மற்றும் அவருக்குப் பிறகு அதிபாரன டெங் ஜியோபிங் ஆகியோர் மூன்று முறை அதிபராக இருந்துள்ளார்கள்.
அதன் பின் தற்போதைய அதிபர் ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாகவும் சீனாவின் அதிபராக பதவி வகிக்க அக் கட்சியின் மத்திய குழு அனுமதி அளித்துள்ளது.
அதன்மூலம், ஷி ஜின்பிங் மேலும் 5 ஆண்டுகள் சீன அதிபராக தொடருவது உறுதியாகியுள்ளது.
சீன அதிபராக ஷி ஜின்பிங் 2012-இல் பதவியேற்றாா்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனா் மாவோ சேதுங்குக்கு பின், சீனாவின் வலிமையான அதிபராக ஜின்பிங் கருதப்படுகிறாா்.
இவரது பதவிக் காலம் அடுத்த ஆண்டு முடிகிறது. எனினும் இப்போதுள்ள சா்வதேச சூழ்நிலையில், ஜின்பிங்கே அதிபராக இருப்பது நாட்டுக்கு நல்லது என , சீன கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
சீனாவில் அதிபர் ஒருவா் இரண்டு முறை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும் என்ற சட்டத்தை , கடந்த 2018-ஆம் ஆண்டு கொண்டு வந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஷி ஜின்பிங் மாற்றியமைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
#world
Leave a comment