உலகிலேயே பணக்கார குடும்பமாக 2024ஆம் ஆண்டில் திகழ்ந்தது, வால்ட்டன் குடும்பம்.
வால்மார்ட் சாம்ராஜ்யத்தின் உரிமையாளர்கள்தான் இந்த வால்ட்டன் குடும்பம்.
1962ஆம் ஆண்டு, அமெரிக்காவின் ஆர்க்கன்சாஸில் எளிமையாக துவக்கப்பட்ட வால்மார்ட்டின் தாரக மந்திரம், எங்கும் எப்போதும் குறைவான விலையில் பொருட்கள் என்பதாகும்.
2024ஆம் ஆண்டில், உலகிலேயே பணக்கார குடும்பம் என்ற பெருமையை எட்டிப் பிடித்துள்ளது வால்ட்டன் குடும்பம்.
சில்லறை வர்த்தகத்தில், குறைவான விலையில் மக்களுக்கு பொருட்கள் கிடைக்கச் செய்யும் நோக்கில், Sam Walton மற்றும் அவரது சகோதரரான Bud Walton ஆகிய இருவரும் துவங்கிய வால்மார்ட், இன்று உலகின் மிகப்பெரிய சில்லறை விற்பனைக் கடைகளின் தொடராக விளங்குகிறது.
இன்று, சாம் மற்றும் பட் வால்ட்டனின் சந்ததிகள் தொடர்ந்து வால்மார்ட் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திவருகிறார்கள்.
வால்மார்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களான வால்ட்டன் குடும்பத்தின் சொத்து மதிப்பு, 432.4 பில்லியன் டொலர்கள்.
இலங்கை மதிப்பில், அது 12,94,60,30,27,22,000.00 ரூபாய் ஆகும்.