23
உலகம்செய்திகள்

திடீர் போர்நிறுத்தத்தை அறிவித்த புடின்! எவ்வளவு மணிநேரம்?

Share

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனுக்கு எதிரான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன் – ரஷ்யா போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி வருகின்றனர். கடந்த ஈஸ்டர் நாளில் தற்காலிக போர் நிறுத்தத்தை அமுல்படுத்திய ரஷ்யா, அதன் பின்னர் மீண்டும் தொடங்கியது.

எனினும், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) கூறினார்.

இந்த நிலையில், புடின் உக்ரைனுக்கு எதிரான போரை மூன்று நாட்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரில், சோவியத் யூனியன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவு நாள் அடுத்த மாதம் வருகிறது.

இதனை குறிக்கும் வகையில் புடின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மே 8ஆம் திகதி முதல் மே 10ஆம் திகதி வரை என 72 மணிநேரம் இந்த போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் என கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், “இந்தக் காலத்திற்கு அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. உக்ரைன் தரப்பு இந்த முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று ரஷ்யா நம்புகிறது” என கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...