சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வளர்ப்புப் பிராணியான நாயின் பிறந்த நாளுக்காக 11 இலட்சம் செலவழித்து பொறாமைப்பட வைத்துள்ளார்.
.சீனாவின் சாங்க்ஷா பகுதியிலுள்ள சியான்ஜியாங் ஆற்றுப்பகுதியில், தான் வளர்த்து வந்த செல்ல நாயின் 10 ஆவது பிறந்தநாளை 11 இலட்சம் செலவுசெய்து வெகு விமர்சையாகக் கொண்டாடியுள்ளார்.
520 ட்ரோன்களை வாடகைக்கு எடுத்து, அவற்றை ‘’ஹேப்பி 10 ஆவது பர்த்டே டௌ-டௌ’’ என்ற எழுத்துகள் மற்றும் மற்றும் நாயின் உருவப்படம் ஆகிய வடிவங்களில் ஆகாயத்தில் பறக்கவிட்டு கொண்டாடியுள்ளார்.
இதேவேளை குறித்த ஆற்றங்கரையில் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்ட பகுதி என்பதால், மிக நீண்ட நேரம் மகிழ்ச்சியாக அவர் கொண்டாடவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், ஆகாயத்தில் பறக்கும்போது ட்ரோன்களைப் பார்த்திருந்தால் கண்டிப்பாக சுட்டு வீழ்த்தியிருப்போம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#WorldNews
Leave a comment