கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளி பெண்ணான அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீண்டகாலமாக பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஜித் சஜ்ஜனுக்கு பதிலாகவே அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹர்ஜித் சஜ்ஜனுக்கு வேறு துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்புத்துறையில் எழுந்த பாலியல் குற்றச்சாட்டுகளை ஹர்ஜித் சஜ்ஜனால் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் புகார் எழுந்த நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அனிதா மிகச்சிறந்த நிர்வாகி என்பதை மக்கள் அடுத்த சில மாதங்களில் புரிந்துகொள்வார்கள் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புகழாரம் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#world
Leave a comment