887193
உலகம்செய்திகள்

மக்களுக்காக எந்நேரமும் உழைப்பேன் – புதிய பிரதமர்

Share

இங்கிலாந்தின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

45 நாட்கள் பிரதமராக இருந்த நிலையில் லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவியை இராஜினமா செய்வதாக இங்கிலாந்தின் புதிய மன்னர் சார்லசிடம் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதையடுத்து, புதிய கட்சித் தலைவருக்கான தேர்தல் தொடங்கியது. இந்த தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், பின்னர் போட்டியில் இருந்து விலகிக்கொண்டார். ரிஷி சுனக்கிற்கு மற்றொரு போட்டியாளராக இருந்த பென்னி மார்டன்ட்டும் போட்டியிடும் முடிவை கைவிட்டார். இதையடுத்து, கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ரிஷி சுனக், “கன்சர்வேடிவ் மற்றும் யூனியனிஸ்ட் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை பணிவாகவும் பெருமையாகவும் கருதுகிறேன். இந்த வாய்ப்பின்மூலம் நான் நேசிக்கும் கட்சிக்கும், நான் கடன்பட்டிருக்கும் நாட்டிற்கும் பிரதமராக சேவை செய்ய முடிந்தது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம்.

இங்கிலாந்து ஒரு பெரிய நாடு. ஆனால் கடுமையான பொருளாதார சவால்களை எதிர்கொள்கிறது. நமக்கு இப்போது ஸ்திரத்தன்மை மற்றும் ஒற்றுமையே தேவை. எனது கட்சியையும் நாட்டையும் முன்னேற்றுவதற்கே முன்னுரிமை அளிப்பேன். அதுதான் சவால்களை சமாளித்து நமது நாட்டின் அடுத்த சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஒரே வழி.

நான் உங்களுக்கு நேர்மையுடனும் பணிவுடனும் சேவை செய்வேன் என்றும், பிரிட்டன் மக்களுக்காக நாள் தோறும் உழைப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன்” என்றார்.

#Worldnews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...