1730680 wildfires
உலகம்செய்திகள்

பிரான்சில் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் காட்டுத்தீ! – மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

Share

ஸ்பெயினின் மலாகா பிராந்தியம் மற்றும் தென்மேற்கு பிரான்சில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வந்தநிலையில், தற்போது காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.

மரங்கள் பற்றி எரிவதால் விண்ணை முட்டும் அளவிற்கு புகை எழுந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கோடை வெப்பம் தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தீ பரவி வரும் பகுதிகளில் வசித்த மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

பிரான்சின் ஜிரோண்டே பகுதியில் இருந்து சுமார் 14,000 பேர் நேற்று வெளியேற்றப்பட்டனர். அங்கு 1,200 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடிவருகின்றனர்.

10000 ஹெக்டேர் பரப்பளவில் பரவியிருக்கும் காட்டுத்தீயில், மரங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...