பொதுமக்களுக்கு எச்சரிக்கை! 3 பேரை துப்பாக்கியால் சுட்ட நபரால் பரபரப்பு: பொலிஸார் வலைவீச்சு
அமெரிக்காவின் பிலடெல்பியா(Philadelphia) பகுதிக்கு அருகே 3 பேரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு காரில் தப்பியோடிய நபரை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அமெரிக்காவின் பிலடெல்பியா(Philadelphia) பகுதிக்கு அருகே உள்ள சிறிய நகரான Falls Township-ல் மர்ம நபர் ஒருவர் 3 பேரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு திருடப்பட்ட காரில் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு உள்ளே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் செயின்ட் பாட்ரிக் தின அணிவகுப்பு (St Patrick’s Day parade) ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள Falls Township பொலிஸார், தேடப்படும் சந்தேக நபர் 26 வயதுடைய Andre Gordon என நம்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்ட Andre Gordon, Levittown பகுதியில் இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார், பின் மற்றொரு நபரையும் அவர் துப்பாக்கியால் சுட்டு தாக்கியுள்ளார்.
அத்துடன் துப்பாக்கி முனையில் கார் திருட்டில் இறங்கிய Andre Gordon, திருடிய காரில் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்கப்பட்டவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனரா அல்லது தற்செயலாக தாக்கப்பட்டனரா என்பது தற்போது தெரியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- abc news
- breaking news
- british north america act 1867
- canada
- canada confederation history
- canada french history
- canada gaining independence
- canada history confederation
- canada history european arrival
- canada history french british rivalry
- canada history indigenous
- canada history path to independence
- canada indigenous history
- crime
- daily news
- Donald Trump
- first nations canada history
- Food shortages
- france
- french colonization canada
- Gaza
- Israel
- Israel-Hamas War
- Joe Biden
- Kate Middleton
- latest news
- live news
- News
- Palestine
- Prince William
- putin news
- Royal Family
- russia news
- seven years war canada
- sri lanka
- statute of westminster canada
- trt world
- United Kingdom
- United States of America
- us news
- World
- world news
- world news live
- world news tonight