1 8 1 scaled
உலகம்செய்திகள்

வாக்னர் தலைவன் விமான விபத்து தொடர்பில் சந்தேகம்

Share

வாக்னர் தலைவன் விமான விபத்து தொடர்பில் சந்தேகம்

வாக்னர் கூலிப்படை தலைவன் உட்பட 10 பேர் கொல்லப்பட்ட விமான விபத்தில் தங்களுக்கு நியாயமான சந்தேகங்கள் இருப்பதாக பிரான்ஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஆலிவர் வேரன் தெரிவிக்கையில், இந்த விபத்தின் பின்னணி தொடர்பில் உறுதியான தகவல் இன்னும் தெரிய வரவில்லை என குறிப்பிட்ட அவர், இதில் சில நியாயமான சந்தேகங்கள் எழுவது இயல்பு என்றார்.

மேலும், இந்த விபத்து தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்த கருத்து குறித்து முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வேரன், பொதுவான விதி என்னவென்றால், உண்மை கண்டிப்பாக வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவிக்கையில், விளாடிமிர் புடினுக்கு தெரியாமல் ஒரு நகர்வும் ரஷ்யாவில் முன்னெடுக்கப்படுவதில்லை என்றார். புடினுக்காக வாக்னர் கூலிப்படை தலைவன் கொடூரங்கள் பல நிகழ்த்தியுள்ளார்.

புடின் வகுத்த கொள்கையின்படியே எவ்ஜெனி பிரிகோஜின் செயல்பட்டுள்ளார். வாக்னர் கூலிப்படையின் தலைவராக முறைகேடுகளை முன்னெடுக்கும் பொறுப்பை புடின் அவருக்கு வழங்கியிருந்தார் எனவும் வேரன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

மேலும், பிரிகோஜின் கல்லறைகளை மட்டுமே விட்டுச் சென்றிருக்கிறார். உலகின் பெரும் பகுதி முழுவதும் குழப்பங்களை மட்டுமே பிரிகோஜின் ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகள், உக்ரைன் மட்டுமின்றி ரஷ்யாவிலும் அவரால் குழப்பம் மட்டுமே ஏற்பட்டது என ஆலிவர் வேரன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...