ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு ஒரே நாளில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய வாக்னர் படையின் தலைவரான யெவ்ஜெனி, விசாரணையைத் தவிர்ப்பதற்காக பெலாரஸ் செல்லவுள்ளார்.
பெலாரஸ் அதிபரின் மத்தியஸ்த பேச்சு வெற்றியடைந்ததாகவும், வாக்னர் படையின் தலைவர் ரஷ்யாவில் கிளர்ச்சியை நிறுத்தியதாகவும் நேற்று செய்தி வெளியானது.
புடின் அரசுக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டி, ஒரே நாளில் உண்டான பெரும் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இப்போது Wagner தலைவர் Yevgeny Prigozhin அண்டை நாடான பெலாரஸுக்கு செல்வதாக தகவல்கள தெரிவிக்கின்றன.
மஸ்கொவை நோக்கி படையெடுத்ததற்காக எந்த ஒரு வழக்கையும் அவர் எதிர்கொள்ள மாட்டார் என்று ரஷ்யா அறிவித்தது.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ஆயுதமேந்திய கிளர்ச்சியை நடத்தியதற்காக யெவ்ஜெனி பிரிகோஷ் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்படும் என்றும், அவருடன் இணைந்த வீரர்கள் மீது வழக்குத் தொடரப்பட மாட்டாது என்றும் அறிவித்தார்.
கிளர்ச்சியில் பங்கேற்காத அவரது வாக்னர் குழுவைச் சேர்ந்த போராளிகளுக்கு பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமைச்சகம் வழங்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.\
இந்த நேரத்தில் புடின் யெவ்ஜினி பிரிகோஷினுக்கு என்னென்ன சலுகைகளை வழங்கினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பல பில்லியன் டொலருக்கான ஒப்பந்தம் எட்டப்பட்டிருக்கலாம் தகவல்கள் கசிந்து வருகின்றன.
Leave a comment