மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 16 ஆம் நாள் காரியத்தின் போது ஒரு அதிசய நிகழ்வு நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியும் வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி உயிரிழந்தார்.
கடந்த ஒரு சில மாதங்களாக உடல்நலக்குறைவினால் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் வீடு திரும்பினார்.
அதையடுத்து மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
இந்நிலையில் இவருக்கு இன்று 16 ஆம் நாள் காரியத்தை குடும்பத்தார்கள் செய்துள்ளனர்.
அவருடைய இறுதி ஊர்வலத்தின் போது, உடல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடக்கும் போது வானில் இரு கருடன்கள் வட்டமிட்டன.
அவருடைய உடலுக்கு 3 முறை வட்டமிட்ட கருடனை பார்த்து அங்கிருந்தோர் மெய்சிலிர்த்தனர். உடனே பிரேமலதா உள்ளிட்டோர் கருடனை வணங்கியுள்ளனர்.
இதுபோலவே 16 ஆம் நாள் கிரியையின் போதும் நிகழ்ந்துள்ளது. அதை பார்த்த பொதுமக்களும் கேப்டன் விஜயகாந்தை வந்துள்ளார் என நினைத்து வணங்கியுள்ளனர்.
இந்த காட்சிகாண்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.