6 36
உலகம்செய்திகள்

போர்நிறுத்த விவகாரம்! பகைமை மறந்து இராஜதந்திரங்களை வகுக்கும் ரஷ்யா – அமெரிக்கா

Share

போர்நிறுத்த விவகாரம்! பகைமை மறந்து இராஜதந்திரங்களை வகுக்கும் ரஷ்யா – அமெரிக்கா

சவூதி அரேபியாவில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த உக்ரைனுடனான போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில், அமெரிக்காவும் ரஷ்யாவும் நான்கு கொள்கைகளுக்கு உடன்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கொள்கைகளை ரூபியோ பின்வருமாறு விளக்கியிருந்தார்.

1. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் உள்ள எங்கள் தூதரகங்களின் செயல்பாட்டை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு, தற்போதைய பாதையில் நாம் தொடர்ந்து செல்ல இராஜதந்திர வசதிகள் காணப்பட வேண்டும்.

2. உக்ரைனுடனான மோதல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவும், பணியாற்றவும் எங்கள் தரப்பில் இருந்து ஒரு உயர்மட்டக் குழுவை நியமிக்கப் போகிறோம்.

3. உக்ரைனில் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் விளைவாக ஏற்படக்கூடிய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு இரண்டையும் பற்றி விவாதிக்கவும் சிந்திக்கவும் தொடங்குவோம்.

4. உற்பத்தித் திறன் மிக்கதாக முன்னேற்றத்தை உறுதிசெய்ய தொடர்ந்து ஈடுபடுவோம்.” என மார்கோ சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக இந்த பேச்சுவார்த்தையில் மார்கோ ரூபியோ , அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், இரு நாடுகளுக்கு இடையேயான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி உதவியாளர் யூரி உஷாகோவ் ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.

உக்ரைனில் போர் முடிவுக்கு வந்தால் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் சிறந்த பொருளாதார வாய்ப்புகள் கிடைக்கக்கூடும் என்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.

பொது நலன் சார்ந்த பிரச்சினைகளில் புவிசார் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ரஷ்யர்களுடன் பங்காளியாக அமெரிக்காவிற்கு நம்பகமான வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் ரூபியோ கூறியுள்ளார்.

இந்நிலையில் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பல வருட பகைமைக்குப் பிறகு ஒரு “மிகப்பெரிய சாதனை” என்று ரஷ்யாவின் இறையாண்மை செல்வ நிதியத்தின் தலைவரும், சவுதி அரேபியாவின் ரஷ்ய பேச்சுவார்த்தைக் குழுவின் ஒரு அங்கத்தவரான கிரில் டிமிட்ரிவ் கூறியுள்ளார்.

அத்தோடு, அமெரிக்க-ரஷ்யா உறவுகளில் முன்னேற்றம் சிறந்த அடித்தளத்திலிருந்து தொடங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...