rtjy 117 scaled
உலகம்செய்திகள்

ரஷ்ய தூதர்களை வெளியேற்றிய அமெரிக்கா

Share

ரஷ்ய தூதர்களை வெளியேற்றிய அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள இரண்டு ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்ற பைடன் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்த ரஷ்ய பிரஜை ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி அமெரிக்க தூதரக அதிகாரிகளை ரஷ்யா வெளியேற்றியுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் ரஷ்யாவின் முடிவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாட் மில்லர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தக்க பதிலடி கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“எங்கள் தூதர்களை ரஷ்ய அரசாங்கம் துன்புறுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாது. மேலும் மாஸ்கோவில் உள்ள எங்கள் தூதரக அதிகாரிகளுக்கு எதிராக ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகள் விளைவுகளை ஏற்படுத்தும்” என செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவிற்க்கும் இடையே உக்கிரமான விரோதம் நிலவி வரும் நேரத்தில் இராஜதந்திரிகளின் வெளியேற்றங்கள் தற்போது சர்வதேச மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...