ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி, வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஆப்கான் மக்கள் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்புமாறு, ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்களில் ஆட்சி நிலவுகிறது. ஆகவே தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி ஏராளமான ஆப்கான் மக்கள் வெளிநாடுகளில் தஞ்சம் கோரியுள்ளனர்.
அதிகபட்சமாக ஈரானில் 30 இலட்சம் ஆப்கானியர்களும், அதற்கு அடுத்த படியாக பாகிஸ்தானில் 14 இலட்சம் பேரும் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்தநிலையில், அனைத்து ஆப்கானிஸ்தான் மக்களும், உடனடியாக நாடு திரும்ப வேண்டுமென ஆப்கான் அமைச்சர் கலீல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
#WorldNews
Leave a comment