ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை 28ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகி ஏப்ரல் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த அமர்வில், மார்ச் 3 ஆம் திகதி உரையாடல் நடைபெறவுள்ளது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான பிரதிநிதிகள் குழு நேற்றையதினம் ஜெனிவா பயணமாகியுள்ளது.
இந்த அமர்வில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணத்தை முன்வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமர்வில், சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கை ஏற்கனவே இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கைக்கு பதிலளித்து இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment