ரஷ்ய கப்பல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொண்ட உக்ரைன்
கிரிமியாவில் ரஷ்யாவின் இரண்டு கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை உக்ரைன் உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் ரஷ்யா போரின் சமீபத்திய மோதலாக ரஷ்யாவின் போர் கப்பலை உக்ரைன் ஏவுகணைகள் தாக்கியமையை ரஷ்யா உறுதிப்படுத்தி இருந்தது.
குறித்த தாக்குதலில் ரஷ்ய போர் கப்பலுக்கு பாரியளவு சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மொத்தமாக ஏவப்பட்ட 15 உக்ரைனிய ஏவுகணைகளில் 13ஐ ரஷ்ய வான் தடுப்பு சாதனங்கள் தடுத்து விட்டதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.
இந்நிலையில் கிரிமியாவின் யெவ்படோரியா மாவட்டத்தில் அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு தரையிறங்கு கப்பல்கள் சேதமடைந்தன என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.