2 scaled
உலகம்செய்திகள்

உக்ரைன் விட்டு வெளியேற முயன்ற முன்னாள் ஜனாதிபதி: எல்லையில் திருப்பி அனுப்பியதற்கான காரணம்?

Share

உக்ரைன் விட்டு வெளியேற முயன்ற முன்னாள் ஜனாதிபதி: எல்லையில் திருப்பி அனுப்பியதற்கான காரணம்?

நாட்டை விட்டு வெளியேற சென்ற உக்ரைன் முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ எல்லையில் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக உக்ரைனை விட்டு வெளியேறிய முடிவு செய்துள்ளார்.

இந்த வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் போது அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் மைக் ஜான்சனை சந்தித்து உரையாட திட்டமிட்டு இருந்தார், இதையடுத்து ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பனை சந்திக்கவும் முடிவு செய்து இருந்தார்.

ஹங்கேரி ஜனாதிபதி விக்டர் ஆர்பன் ரஷ்ய ஜனாதிபதி புடினை பாராட்டி பேசியதோடு, உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கு தனது ஆதரவை ஹங்கேரி வழங்க மறுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பனை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ நாட்டை விட்டு வெளியேறிய முயன்றதால் அவர் எல்லையில் திருப்பி அனுப்பப்பட்டார் என உக்ரைன் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் நாடாளுமன்ற அனுமதி தனக்கு இருந்தும் என்னை அவர்கள் திருப்பி அனுப்பியது ஒற்றுமை மீதான தாக்குதல் என முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ராணுவ சட்டத்தின் படி, 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற சிறப்பு அனுமதி பெற்று இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...