3 ஆசிய நாட்டு மாணவர்களுக்கு பிரித்தானிய பல்கலைக்கழகமொன்று வழங்க உள்ள வாய்ப்பு
இந்தியா(India) உள்ளிட்ட 3 ஆசிய நாட்டு மாணவர்களுக்கு 10,000 பவுண்டுகள் உதவித்தொகையை வழங்கவுள்ளதாக பிரித்தானிய பல்கலைக்கழகமொன்று அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவில் பொறியியல் முதுகலை படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபா இந்திய பணத்தை கல்வி உதவித்தொகையாக வழங்குவதாக உள்ளூர் ஸ்ட்ராத்திகல்ட் பல்கலைக்கழகம் (University of Strathclyde) அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், மலேசியா மற்றும் தாய்லாந்து மாணவர்களுக்கும் இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பொறியியல் பிரிவில் ஓராண்டு முதுகலை படிப்பில் சேரும் மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் இந்தியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டை(Passport) வைத்திருப்பதுடன் மே மாதம் 3 ஆம் திகதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.