5 14
உலகம்செய்திகள்

ரஸ்யாவுக்கு எதிராக பிரித்தானியா விடுத்துள்ள பாரிய தடை

Share

பிரித்தானியா, ரஷ்யாவிற்கு எதிராக வரலாற்றிலேயே மிகப்பாரிய தடைகளை அறிவித்துள்ளது.

இதற்கமைய, ரஷ்யாவிற்காக இரகசியமாக இயங்கும் எண்ணெய் கப்பல்களை குறிவைத்து இந்த தடைகளை பிரித்தானியா அறிவித்துள்ளது.

உக்ரைனில் நடக்கும் போருக்கு நிதியளிக்க ரஷ்யா பயன்படுத்தும் இரகசிய எண்ணெய் கப்பல்களை குறிவைத்து, பிரித்தானிய அரசாங்கம் இதுவரை அறிவிக்காத அளவிற்கு மிகப் பாரிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டின் ஆரம்பத்தின் முதல், இந்த நிழல் கப்பல்கள் 24 டொலர் பில்லியனுக்கும் மேற்பட்ட எண்ணெய் ஏற்றுமதியை மேற்கொண்டு, சர்வதேசத் தடைகளை மீறி ரஷ்யாவுக்கு வருவாய் ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், 100இற்கும் மேற்பட்ட நிழல் எண்ணெய் கப்பல்கள் பிரித்தானியாவின் தடைகளின் கீழ் வந்துள்ளன.

இத்தகைய பழைய கப்பல்கள் பாதுகாப்பு சான்றிதழ் இல்லாமல், வழிகாட்டி தொழில்நுட்பத்தை தவிர்த்து, மாலுமி கண்காணிப்பு அமைப்புகளை முடக்கி பயணிப்பதால், ஐரோப்பிய ஆழ்கடல் கேபிள்கள், எண்ணெய் குழாய்கள் மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகளுக்கு மிகப்பாரிய அபாயமாக உள்ளன.

ஓஸ்லோவில் நடைபெற்றுள்ள ஜேஈஎப் (Joint Expeditionary Force) உச்சிமாநாட்டில், இத்தகவல் முக்கியமாக முன்வைக்கப்பட்டது.

மேலும், 22 முக்கிய கடல்சார் பகுதிகள் தற்போது நார்த்வுட் (UK) கட்டுப்பாட்டு மையத்தால் கண்காணிக்கப்படுகின்றன.

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “இந்த நிழல் கப்பல்களை முற்றிலும் அழிக்கவும், தேவையான அனைத்தையும் பயன்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்யவும் நாம் தயாராக உள்ளோம்.” என்று கூறியுள்ளார்.

இக்கருத்துக்களுக்கு இணையாக, உள்நாட்டுப் பாதுகாப்பு, ராணுவ பயிற்சி மற்றும் விண்வெளி கண்காணிப்பு ஒப்பந்தங்களிலும் பிரித்தானியா- நோர்வே நாடுகள் ஒத்துழைக்க உள்ளன.

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...