tamilnaadij 3 scaled
உலகம்செய்திகள்

துபாய் செல்ல இனி 5 நாட்களில் விசா! இதை செய்தால் போதும்

Share

துபாய் செல்ல இனி 5 நாட்களில் விசா! இதை செய்தால் போதும்

தங்கள் நாட்டிற்கு எளிதாக மக்கள் வந்து செல்ல ஐக்கிய அரபு அமீரகம் புதிய விசா செயல்முறையை கொண்டு வந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் வேலை உட்பட விசாக்களை பெறுவதற்கான செயல்முறையை எளிதாகவும், விரைவாகவும் மாற்ற ”Work Bundle” என்ற புதிய தளத்தை ஆரம்பித்துள்ளது.

இதற்கு முன்பு இருந்த முறையில் பணி அனுமதி மற்றும் தங்குவதற்கான விசாக்கள் பெற 30 நாட்கள் வரை ஆகும். 16 வகையான ஆவணங்களை அதற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால் புதிய செயல்முறை மூலம் இது தற்போது எளிதாகியுள்ளது. அதாவது, வெறும் 5 நாட்களில் இனிமேல் துபாய் விசா பெற முடியும்.

இதற்கு 5 ஆவணங்களை மட்டுமே சமர்ப்பித்தால் போதும். அத்துடன் இந்த செயல்முறைக்காக 7 முறை விசாமையங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்தது. தற்போது அது இரண்டு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐக்கிய அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘Work Bundle என்ற இந்த தளம் அரசு நடைமுறைகளை எளிமையாக்கும். விரைவாக துபாயில் வந்து தங்கும் செயல்முறையை விரைவானதாக மற்றும்.

இதன் முதற்கட்டம் Invest in Dubai தளம் மூலம் துபாயில் செயல்படுத்தப்படும். அதேபோல் மற்ற அரசு டிஜிட்டல் தளங்களும் இதில் படிப்படியாக சேர்க்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
12 4
செய்திகள்உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவில் போர் நிறுத்த முயற்சி முறியடிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

11 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வளைகுடா கடற்பரப்பில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் காரணமாக ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

10 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அருகே இரண்டாவது ஈரானிய கப்பல்: 87 சடலங்கள் மீட்பு – பாராளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்தில் (EEZ) இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr...

09 4
செய்திகள்உலகம்

ஈரான் அணு ஆயுதத் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் கடினம்: அவுஸ்திரேலிய, கனடிய பிரதமர்கள் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனடியப்...