25 6849c5dfe0a82
உலகம்செய்திகள்

சீனாவுடன் அதிரடியாக ஒப்பந்தம் செய்த ட்ரம்ப்..! நடக்கவுள்ள மாற்றங்கள்

Share

லண்டனில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்காவும் சீனாவும் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிறுவனங்களுக்கு அரிய மண் உலோகங்களை வழங்க சீனா ஒப்புக்கொண்டதாகவும், அதற்கு ஈடாக, சீன மாணவர்களுக்கான விசாக்களை கட்டுப்படுத்தும் திட்டத்தை அமெரிக்கா நிறுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோரின் இறுதி ஒப்புதல் மட்டுமே இனி தேவை.

மே மாதம் ஒப்பந்தமொன்று செய்யப்பட்டதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக சிக்கல்களை சரிசெய்ய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

இதற்கமைய, இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று விதித்த அதிக வரிகளில் சிலவற்றைக் குறைத்துக்கொண்டன.

ஆனால், சீன ஏற்றுமதிகளை அனுமதிப்பது மற்றும் தொழில்நுட்ப மற்றும் மாணவர் விசாக்களுக்கான அமெரிக்க வரம்புகள் உள்ளிட்ட சில சிக்கல்கள் தொடர்ந்தன.

இதனையடுத்து, இரு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் பொருளாதார வர்த்தக நிபுணர்களும் கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்றை உருவாகும் நோக்கில் செயற்பட்டனர்.

இந்த ஒப்பந்தம் ஒரு சிறிய முன்னேற்றம் மட்டுமே என நிபுணர்கள் கூறினாலும் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலைத் கட்டுப்படுத்த இது உதவுகின்றது.

எவ்வாறாயினும், அமெரிக்க – சீன உறவை வலுப்படுத்தும் முழுமையான வர்த்தக ஒப்பந்தம் இது அல்ல என பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...