உலகம்செய்திகள்

நிலவில் தொடருந்து போக்குவரத்தை உருவாக்க அமெரிக்கா திட்டம்

Share
download 1
Share

நிலவில் தொடருந்து போக்குவரத்தை உருவாக்க அமெரிக்கா திட்டம்

அறிவியலின் அடுத்த பரிணாமத்தை வெளிப்படுத்தும் முகமாக நிலவில் தொடருந்து போக்குவரத்தை உருவாக்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.

அமெரிக்காவில் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட அமைப்பான தர்ப்பா(DARPA) நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மனிதரை நிலவுக்கு கொண்டு செல்ல உதவிய பல தொழில்நுட்பங்களின் உந்து சக்தியாக குறித்த அமைப்பு இருந்துள்ளது.

நார்த்ரோப் க்ரம்மன் எனும் நிறுவனத்துடன் நிலவில் தொடருந்து போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு கருத்தை உருவாக்குவதற்கும், அதை முன்னெடுத்து செல்லவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மனிதர்கள், பொருட்கள் மற்றும் வளங்களை சந்திர மேற்பரப்பின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல பயன்படுத்தலாம் என அமெரிக்கா கூறியுள்ளது.

அத்துடன் வளர்ந்து வரும் அமெரிக்காவின் விண்வெளி பொருளாதாரத்திற்கு பங்களிக்க முடியும். இதற்காக நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனம் புதிய ஆய்வை மேற்கொள்கிறது.

முதலில் நிலவில் தொடருந்து அமைப்பு உருவாக்க தேவைப்படும் இடைமுகங்கள் மற்றும் வளங்களை வரையறுக்க வேண்டும் எனவும், பின்னர், அது எதிர்பார்க்கக்கூடிய செலவு,. தொழில்நுட்ப மற்றும் தளவாட அபாயங்களின் பட்டியலையும் அந்நிறுவனம் தயார் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...