tamilni 317 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை மண்ணில் சீன இராணுவத் தளம்: அமெரிக்காவின் கூற்றை மறுக்கும் அரசாங்கம்

Share

இலங்கை மண்ணில் சீன இராணுவத் தளம்: அமெரிக்காவின் கூற்றை மறுக்கும் அரசாங்கம்

இலங்கை தனது மண்ணில் சீன இராணுவத் தளத்தை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ள கூற்றுக்களை இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மறுத்துள்ளார்.

மேலும், இலங்கை தனது எல்லைக்குள் இராணுவத் தளம் அமைப்பது தொடர்பில் சீனா உள்ளிட்ட வெளிநாட்டு அரசாங்கங்களுடன் எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் இராணுவ தளங்களை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை சீனா ஆராய்ந்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை தனது வருடாந்த அச்சுறுத்தல் மதிப்பீட்டில் குறிப்பிட்டுள்ளது.

எனினும், இலங்கையில் சீன இராணுவத் தளம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அமெரிக்க புலனாய்வு அறிக்கை தவறானது என்பதோடு இந்த கூற்றுக்களை கடுமையாக மறுக்கிறோம் என்றும் பிரேமித பண்டார கூறியுள்ளார்.

அத்துடன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனது எல்லைக்குள் இராணுவத் தளங்களை நிறுவுவதற்கு எந்தவொரு வெளிநாட்டையும் இலங்கை அனுமதிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...