உலகம்செய்திகள்

உலகில் அதிக தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகள் எவை தெரியுமா..!

Share
tamilnic 3 scaled
Share

உலகில் அதிக தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகள் எவை தெரியுமா..!

ஒரு நாடு வைத்திருக்கும் தங்கத்தின் கையிருப்பானது அந்த நாட்டின் கெளரவமாக கருதப்படுகிறது, இதனால் நாடுகளிடையே தமக்கான தங்க இருப்பை பேணுவதில் போட்டி நிலவி வருகிறது, இதற்கான காரணம் யாதெனில் ஒரு நாட்டிலுள்ள தங்கத்தின் கையிருப்பில் அடிப்படையிலேயே அந்த நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை கணிக்கப்படுகிறது.

இந்த போட்டியின் விளைவால் , 2024 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை சராசரியாக அவுன்ஸ் ஒன்றுக்கு 2,031 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்று ஐஎன்ஜி வங்கி கணித்துள்ள நிலையில் இது நான்காவது காலாண்டில் 2,100 அமெரிக்க டொலர்ககளை எட்டக்கூடும் எனவும் எதிர்வுகூறியுள்ளது.

இப்படி செழிப்பின் அடையாளமாகப் பார்க்கப்படும் தங்கத்தை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடுகளை பற்றி நாம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

அந்த வரிசையில், உலக தங்க கவுன்சிலின் (2022) தரவுகளின்படி, உலகளவில் தங்கம் உற்பத்தி செய்யும் முதல் 10 நாடுகள் எவை என்பதைக் காண்போம்.

தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் முதல் நாடு சீனா, உலகிலேயே அதிகபட்சமாக 375 மெட்ரிக் தொன் தங்கத்தை சீனா உற்பத்தி செய்கிறது.

தங்கம் உற்பத்தியில் ஆசிய நாடான ரஷ்யா 2-வது இடத்தில் உள்ளது, அந்த நாடு 324.7 மெட்ரிக் தொன் தங்கத்தை உற்பத்தி செய்கிறது.

இந்த பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள அவுஸ்திரேலியா 313.9 மெட்ரிக் தொன் தங்கத்தை உற்பத்தி செய்கிறது.

அடுத்ததாக கனடா பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. கனடாவிடம் 194.5 மெட்ரிக் தொன் தங்கத்தை உற்பத்தி செய்கிறது.

மதிப்புமிகு மஞ்சள் உலோகத்தை உற்பத்தி செய்வதில் அமெரிக்கா 5-வது இடத்தில் உள்ளது. அந்நாட்டிடம் 172.7 மெட்ரிக் தொன் தங்கத்தை உற்பத்தி செய்கிறது.

ஆறாவது இடத்தை 127 மெட்ரிக் தொன் தங்க உற்பத்தியுடன் மேற்கு ஆப்பிரிக்க நாடான கானா தன்வசமாக்கி இருக்கிறது.

125.7 மெட்ரிக் தொன் தங்க உற்பத்தியுடன் பேரு நாடு 7-வது இடத்தில் உள்ளது.

எட்டாம் இடத்தில் உள்ள இந்தோனேசியா 124.9 மெட்ரிக் தொன் தங்கம் உற்பத்தி செய்கிறது

மெக்சிக்கோ 124 மெட்ரிக் தொன்த்தை உற்பத்தி செய்வதனால் அதிகம் தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் 9 இடத்தை பிடித்துள்ளது.

பத்தாவது இடத்தில் உஸ்பெகிஸ்தான் உள்ளது. அந்த நாடு 110.8 மெட்ரிக் தொன் தங்கத்தை உற்பத்தி செய்கிறது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...