இளைஞரின் அந்தரங்கப் படத்திற்காக 37 லட்சம் செலவிட்ட பிரித்தானிய ஊடக பிரபலம்
உலகம்செய்திகள்

இளைஞரின் அந்தரங்கப் படத்திற்காக 37 லட்சம் செலவிட்ட பிரித்தானிய ஊடக பிரபலம்

Share

இளைஞரின் அந்தரங்கப் படத்திற்காக 37 லட்சம் செலவிட்ட பிரித்தானிய ஊடக பிரபலம்

பிரித்தானிய ஊடக பிரபலம் ஒருவர் சுமார் 37 லட்சம் தொகையை செலவிட்டு, இளைஞர் ஒருவரின் அந்தரங்கப் புகைப்படங்களை பெற்றுக்கொண்ட விவகாரம் தற்போது தீயாக பரவி வருகிறது.

பிரித்தானியாவின் BBC செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் பிரபலம் ஒருவர் என தகவல் கசிய, பல பிரபலங்களும் மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர், அந்த ஊடக பிரபலம் யார் என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த ஊடக பிரபலம் அந்த இளைஞரின் அந்தரங்கப் புகைப்படங்களுக்காக 35,000 பவுண்டுகள் வரையில் செலவிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞரின் தாயார் தெரிவிக்கையில், அந்த பணத்தால் தமது பிள்ளை போதை மருந்து பழக்கத்திற்கு இரையானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பில் BBC செய்தி நிறுவனத் தலைவர்களுக்கு மே 19ம் திகதி முறைப்படி புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்த பிரபலம், அதன் பின்னரும் சக பிரபலங்களுடன் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டுள்ளதும், BBC செய்தி நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுடன் காணப்பட்டதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இளைஞரின் அந்தரங்கப் புகைப்படம் கோரிய விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், Gary Lineker, Rylan Clark மற்றும் Jeremy Vine உட்பட பல ஊடக பிரபலங்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தான் முன்னாள் பொலிஸ் அதிகாரியான Mark Williams Thomas, பொதுமக்களுக்கு அந்த நபரை அம்பலப்படுத்த வேண்டும் என கூறியதுடன், BBC செய்தி நிறுவனத்திற்கு நிதியுதவி அளிப்பவர்களேனும் அந்த பிரபலம் யார் என்பதை அறிய வேண்டும் என்றார்.

ஒரு மாத காலமாக இந்த விவகாரத்தை BBC செய்தி நிறுவனம் விசாரித்து வருகிறது. இன்னும் தாமதப்படுத்தாமல், அந்த பிரபலத்தின் பெயரை வெளியிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய தாயார் தமது புகார் மனுவில் குறிப்பிடுகையில், தமது பிள்ளைக்கு 17 வயதிருக்கும் போது தான் முதல் முறையாக, கடந்த 2020ல் குறுந்தகவல்கள் அந்த நபரிடம் இருந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

அந்த நபர் தாம் தமது பிள்ளையின் வாழ்க்கையை தொலைக்க வைத்தவர். போதை மருந்துக்கு அடிமையாக காரணம்.

ஒருமுறை 5,000 பவுண்டுகள் மொத்தமாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அந்த தொகை தமது பிள்லையின் அந்தரங்கப் புகைப்படத்திற்கான கட்டணம் என்பது தமக்கு தெரியவந்தது என்றார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...