பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் இராணுவத்தில் இருந்து 4,500 வீரர்கள் மற்றும் 250 அதிகாரிகள் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் இராணுவத்தில் இருந்து 4,500 வீரர்கள் மற்றும் 250 அதிகாரிகள் ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்கள் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக கவலைப்படும் குடும்பங்கள் வீரர்கள் மற்றும் அதிகாரிகளை கணிசமான எண்ணிக்கையில் ராஜினாமா செய்யத் தூண்டி வருவதாக கூறப்படுகிறது.
அத்துடன் சில வீரர்கள் ஏற்கனவே பணியில் இருந்து விலகிவிட்டாலும், மற்றவர்கள் ராஜினாமா செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இது பாகிஸ்தான் இராணுவத்தில் மோசமடைந்து வரும் நெருக்கடியைக் குறிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக இதனை ஒப்புக்கொள்ளவில்லை. எனினும் ராஜினாமா தொடர்பாக உள்துறைக்கு எழுதிய கடிதங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதற்கிடையில் பாகிஸ்தான் இராணுவத்தின் உட்பூசல், நிதி தட்டுப்பாடு மற்றும் இதர பிரச்சனைகள் காரணமாக வீரர்கள் ராஜினாமா செய்துள்ளதாக மற்றொரு காரணமும் கூறப்பட்டுள்ளது.