rtjy 81 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸுக்கும் ஈரானுக்கும் கிடைத்த வெற்றி

Share

ஹமாஸுக்கும் ஈரானுக்கும் கிடைத்த வெற்றி

தென்னாப்பிரிக்கா தனது அனைத்து தூதரக அதிகாரிகளையும் திரும்ப பெற்றுக்கொண்டமையானது ஹமாஸ் அமைப்பினருக்கும் ஈரானுக்கும் கிடைத்த வெற்றியாகும் என இஸ்ரேலிய வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த அக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பித்த தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் நடாத்தி வரும் போரானது 32 ஆவது நாளாகவும் நீடித்து வருகின்றது.

இந்தநிலையில், ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்குமான போரில் குழந்தைகளும் அப்பாவி பொதுமக்கள் பலியாவது தொடரும் நிலையில் தென்னாப்பிரிக்கா, இஸ்ரேலுடனான தனது உறவை முடிவு செய்ய இஸ்ரேலில் இருந்த அனைத்து தூதரக அதிகாரிகளையும் திரும்ப பெற்றுள்ளது.

தூதர்களைத் திரும்ப பெறுவது வழக்கமான நடவடிக்கை என்றாலும் இஸ்ரேலுடனான உறவைத் தொடர்வது என்பது எல்லா விதங்களிலும் சாத்தியமானதா என்பது குறித்து தீர்மானம் எடுக்க அவர்கள் அழைக்கப்பட்டிருப்பதாகத் தென்னாப்பிரிக்காவின் வெளியுறவு அமைச்சர் நலேதி பந்தோர் தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்ரேலின் பதிலளிக்கும் இயல்பு என்பதை கூட்டு தண்டனையாகத் தான் பார்க்க முடிகிறது. முழுமையான போர் நிறுத்தத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
02 15
செய்திகள்உலகம்

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த மேலதிக கப்பல்கள் வருகை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு,...

01 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் மழை மற்றும் பனிமூட்டமான வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப்...

29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....