உலகின் வயதான ஆண் பாண்டா கரடி உயிரிழப்பு!

panda 1608643069

கூண்டில் வளர்க்கப்படும் உலகின் மிக வயதான ஆண் பாண்டா கரடி ஹொங்கொங்கில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்தது.

ஆன் ஆன் என்று அழைக்கப்படும் 35 வயதான அந்தப் பாண்டாவுக்கு கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளது. அதன் வயதானது மனித வாழ்நாளுடன் ஒப்பிடுகையில் 105 வயதுக்கு நிகராகும்.

கடந்த சில வாரங்களாக உடல்நிலை மோசமடைந்த நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று ஓசியன் பூங்கா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளது. ஆன் ஆன் அதன் ஜோடியான ஜியா ஜியாவுடன் சீன மத்திய அரசால் 1999 இல் ஹொங்கொங்கிற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.

அதன் ஜோடியான ஜியா ஜியா 2016 ஆம் ஆண்டு தனது 38 வயதில் இறந்தது. இது மனிதப் பராமரிப்பில் அதிக காலம் உயிர் வாழ்ந்த பெண் பண்டா கரடியாக பதிவாகியுள்ளது.

#World

Exit mobile version