7 4 scaled
உலகம்செய்திகள்

உலகின் கடைசி சாலை எங்கே உள்ளது தெரியுமா..!

Share

உலகின் கடைசி சாலை எங்கே உள்ளது தெரியுமா..!

உலகின் கடைசி சாலை எங்கே உள்ளது என புவியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த உலகில் ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்றும் ஒன்றும் இருக்கும் அனைவரும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் செல்வதற்கு சாலை தான் நமக்கு அடித்தளமாக இருக்கிறது.

முன்னர் மண் பாதையாக இருந்தது தற்போதைய நவீன முறைக்கேற்ப புதுப்பிக்கப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நோர்வேயில் உள்ள ‘E-69 நெடுஞ்சாலை’ தான் உலகின் கடைசி சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சாலை பூமத்தியரேகைக்கு மேலே அமைந்துள்ளதுடன் வடக்கு ஐரோப்பாவில் உள்ள நார்த் கேப்(Nordkapp) ஐ நோர்வேயில் உள்ள Oldafevoord கிராமத்துடன் இணைக்கும் இந்த சாலை 129 கி.மீ. தூரத்தை கொண்டது.

இவற்றில் மிக நீளமான சுரங்கப்பாதை ‘நார்த் கேப்’ ஆகும். ‘நார்த் கேப்’ 6.9 கிலோமீட்டர் நீளம் கொண்டதுடன் இந்த ‘நார்த் கேப்’ சுரங்கப்பாதை கடல் மட்டத்திலிருந்து 212 மீட்டர் கீழே உள்ளது.

முடிந்தவரை வட துருவத்திற்கு அருகில் அழைத்துச் செல்லும் சாலை இது என்பதாலே இதனை பூமியின் கடைசி சாலை என்கிறார்கள். இந்த அரிய இடத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

மேலும், இந்த சாலையில் செல்ல சில விதிமுறைகள் பின்பற்றுவது கட்டாயமாகும். ஒருவேளை செல்பவர்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் அவர்களால் அந்த வழியில் செல்ல முடியாது என கூறப்படுகின்றது.

இந்த சாலையில், காற்று பயங்கர வேகத்தில் வீசுவதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளதுடன் கோடை காலத்தில் கூட இந்த சாலையில் பனி பொழியும் என கூறப்படுகிறது.

வானிலை முன்னறிவிப்புகள் இந்த பகுதியில் வேலை செய்யாது எனவே எந்த நேரத்திலும் இயற்கை சீற்றம் இந்த இடத்தில் நடைபெறும் என்பதால் இங்கு யாரும் தனியாக செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

1934ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நீண்ட சாலையானது முழுமை பெற 62 ஆண்டுகள் ஆனதுடன் 1992இல் நிறைவு பெற்ற பிறகு பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...